பகுதி - 1

அறிமுகம்

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகள் கலந்தாய்வு முழுக்க முழுக்க இணையத்தில் நடைபெறுகிறது.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இது நான்கு சுற்றுகளாக நடைபெறுகிறது.

ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை இட்டு நிரப்ப 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

மாணவர்கள் குறிப்பிட்ட விருப்பங்களின் அடிப்படையில்,

மூன்றாவது நாள் Tentative (உத்தேசமான) கல்லூரி, படிப்பு சேர்க்கைப் பட்டியல் அளிக்கப்படும்.

அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம், மறுக்கலாம், அல்லது தற்போது கிடைத்ததை விட நல்ல கல்லூரி, துறை கிடைத்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லலாம்.

நான்காவது நாள் இறுதிக்குள் நீங்கள் இதை உறுதி செய்தால்,

ஐந்தாம் நாள் உறுதியான சேர்க்கைப் பட்டியல் வெளியிடப்படும். இதை நீங்கள் மாற்ற முடியாது.

அதன் பிறகு நீங்கள் கல்லூரியில் சென்று சான்றிதழ்களைக் காட்டி சேர்க்கையை உறுதி செய்யலாம்.

இது தான் அடிப்படை வழிமுறை.

இதில் நீங்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, தெரிந்து வைத்திருக்க வேண்டியது போன்றவற்றை அடுத்தடுத்த பாகங்களில் பார்ப்போம்.

Source article link