பகுதி - 11

கேள்வி: Civil, Mechanical போன்ற படிப்புகள் Tamil medium உள்ளதே. அவற்றைத் தேர்ந்தெடுக்கலாமா?

பதில்:

நீங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் Tamil Mediumல் படித்து இருந்தால்,

இந்தத் துறைகளில் ஆர்வம் இருந்தால்,

நல்ல கல்லூரிகளில் இந்தத் Tamil medium துறைகளை் தேர்ந்தெடுக்கலாம்.

அரசுத் துறையில் பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ் வழி படித்தவர்களுக்குக் கலைஞர் 20% இட ஒதுக்கீடு தந்துள்ளார்.

சற்று முயற்சி செய்தாலே அரசு வேலை வாய்ப்பைப் பெற்று விட முடியும்.

அதே வேளை, Tamil medium என்பதால் பாடம் நடத்துவது, சந்தை மதிப்பில் குறை இருக்குமோ என்று கவலை வேண்டாம்.

ஒரே ஆசிரியர், ஒரே பாடப்புத்தகம் தான் Tamil ,Engilsh இரண்டு வழி மாணவர்களுக்கும்.

தேர்வையும் நீங்கள் தமிழ், ஆங்கிலம் எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்.

கல்லூரியில் படிப்பு, பழக்கம் அனைத்தும் ஆங்கில வழி மாணவர்களுடன் இருக்கும் என்பதால் உங்கள் ஆங்கில மொழித் திறன் குறைந்து விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை. படிக்கும் காலத்தில் ஆங்கிலத்துக்குக் கூடுதல் கவனம் தந்து ஆங்கிலத் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதே வேளை, பள்ளியில் English medium படித்தவர்களுக்கு இந்தப் படிப்புகளில் தமிழ் வழியில் சேர்வதால் பெரிய பயன் இல்லை. அவர்கள் இதே படிப்பை இன்னொரு கல்லூரியில் ஆங்கில வழியில் படிக்கலாம்.

Source article link