பகுதி - 8
கேள்வி: படித்த உடன் வேலை கிடைக்க எந்தத் துறையைப் படிக்க வேண்டும்? எல்லோரும் Computer Science எடுக்கிறார்களே? Computer science படித்தால் மட்டும் தான் கணினி நிறுவனங்களில் Campus interview வாய்ப்பு வருமா?
பதில்:
ஏற்கனவே உள்ள பகுதியில் சொல்லிய படி,
அடிப்படையான துறைகளான
- Civil Engineering
- Mechanical Engineering
- Chemical Engineering
- Electrical and electronics engineering
- Electronics and Communication Engineering
- Computer Science and Engineering
ஆகியவற்றுக்கு Top கல்லூரிகளில் படித்தால் அதே துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
Campusல் கிடைக்காவிட்டாலும் ஓரிரு மாதங்களில் வெளியே சென்ற பிறகு வாய்ப்புகள் கிடைக்கும்.
Campus interview வேலைவாய்ப்புகளைப் பொருத்த வரை,
IT நிறுவனங்கள் அனைத்துத் துறை மாணவர்களையும் நேர்முகத் தேர்வில் பங்கு கொள்ள அனுமதிப்பர்.
Computer science படித்தால் மட்டும் தான் வேலைக்கு எடுப்போம் என்று சொல்வதில்லை.
நேர்முகத் தேர்வில் அவர்கள் மாணவரின் நுண்ணறிவு, தொடர்பாடல் திறன் போன்ற மென் திறன்களையே சோதிக்கிறார்கள். எல்லா நிறுவனங்களுமே வேலைக்கு எடுத்த பிறகு அவர்கள் நிறுவனத்துக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகளை வழங்குவார்கள்.
ஒரு திறமையான மாணவர் முன்னணிக் கல்லூரியில் எந்தத் துறையில் இருந்தாலும் இந்த வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.
ஆகவே, Campus interviewலோ அதற்குப் பிறகோ IT துறை வேலை வாங்குவதற்காக படித்தால் computer science / IT தான் படிப்பேன் என்று மெனக்கெடத் தேவையில்லை.
நல்ல கல்லூரியில் உங்களுக்குப் பிடித்தமான, அடிப்படைத் துறைகளைப் படித்தால் Chemical, MEchanical போன்ற அந்தத் துறை சார்ந்த நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். IT வேலையும் கிடைக்கும்.
அதை விட்டு விட்டு, சுமாரான கல்லூரியில் CSE படித்தால் அங்கு போதுமான நிறுவனங்கள் நேர்முகத் தேர்வுக்கு வருமா, நீங்கள் படித்து முடித்து வெளியே போன பிறகு சந்தையில் மதிப்பு இருக்குமா என்று தெரியாது.