பகுதி - 4

கேள்வி: எத்தனைக் கல்லுரிகளை விருப்பத் தேர்வுகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? :

பதில்: ஒவ்வொரு சுற்று கலந்தாய்வுகளிலும் 15000-5000 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வெறும் 0.5 கட் ஆப் வேறுபாட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருக்கிறார்கள்.

ஆகவே, நீங்கள் குறைந்தது 50 அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகள் / துறைகள் தெரிவைத் தருவது நன்று.

அதிகபட்சம் இவ்வளவு கல்லூரிகள் தான் தர வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லை. எவ்வளவு கல்லூரிகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

ஆனால், இதில் நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது -

நீங்கள் ஒவ்வொரு வரிசையிலும் தரும் கல்லூரி / துறை combo முன்னுரிமை பெறும்.

ஆகவே, தரமான கல்லூரிகளை முன்னுரிமை வரிசையில் தர வேண்டியது மிகவும் முக்கியம்.

உங்கள் மதிப்பெண்ணுக்கு அந்தக் கல்லூரி கிடைக்கிறதோ இல்லையோ அது உங்கள் பிரச்சினை இல்லை. இடம் இருந்தால் கிடைக்கும். இல்லாவிட்டால், அடுத்து நீங்கள் குறிப்பிட்ட இன்னொரு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்.

ஆனால், இந்த வரிசை முறையைப் புரிந்து கொள்ளாமல்,

பக்கத்தில் உள்ள கல்லூரி, senior/நண்பர் படிக்கிற கல்லூரி என்று உங்கள் மதிப்பெண்ணுக்குத் தொடர்பே இல்லாத ஒரு தரம் குறைந்த கல்லூரியை முதல் வரிசையில் கொடுத்தால்,

அது உடனே உங்களுக்குக் கிடைத்து விடும்.

உங்கள் திறமைக்குக் குறைந்த கல்லூரியில் படிக்கும் அவல நிலை ஏற்படும்.

ஆகவே 1, 2, 3 என்று நீங்கள் வரிசைப்படி நிரப்பும் ஒவ்வொரு கல்லூரியும் தரமாகவும் இருக்க வேண்டும். இடம் கிடைத்தால் நீங்கள் சந்தோசமாகப் படிக்கிற கல்லூரியாகவும் இருக்க வேண்டும்.

கல்லூரிகளைத் தெரிவு செய்யும் இரு நாட்களும் நீங்கள் இந்த வரிசையைப் பல முறை மாற்றக் கூடும்.

ஒவ்வொரு முறையும் மிகக் கவனமாக மாற்றுங்கள். மாற்றிய பிறகு "Download choices" என்ற பொத்தானை அழுத்தி, நீங்கள் எண்ணியவாறு சரியான வரிசையிலேயே கல்லூரிகள் அமைந்துள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Source article link