பகுதி - 12
கேள்வி: பிள்ளையை வெளியூருக்கு அனுப்பி விடுதியில் படிக்க வைக்கத் தயக்கம் இல்லை. ஆனால், பக்கத்தில் உள்ள நகரத்துக்கு அனுப்பினால் அவர் அடிக்கடி வந்து போக வசதியாக இருக்குமே? சென்னை போன்ற தொலை தூரத்துக்கு அனுப்பத் தயக்கமாக உள்ளதே?
பதில்:
உங்கள் பிள்ளை எந்தக் கல்லூரியில் எந்த நகரத்தில் படித்தாலும்,
செமஸ்டர் கூடக் கூட,
அவர் வீட்டுக்கு வருவதும் குறைந்து விடும்.
முதல் செமஸ்டரில் வாரா வாரம் வருவார்.
கடைசி ஆண்டு செமஸ்டருக்கு ஒரு முறை தான் வருவார்.
ஆகவே, இந்த சென்டிமென்டை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, படிக்கப் போவது நல்ல கல்லூரியா என்று மட்டும் பாருங்கள்.
ஆகவே, இந்த சென்டிமென்டை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, படிக்கப் போவது நல்ல கல்லூரியா என்று மட்டும் பாருங்கள்.