பகுதி - 7
கேள்வி: கல்லூரியா துறையா? எது முக்கியம்? நல்ல கல்லூரியில் எந்தப் படிப்பு படித்தாலும் நல்லது என்கிறார்களே?
பதில்:
கல்லூரி:துறை முக்கியத்துவம் 50:50 கொள்ளலாம் என்பது என் பரிந்துரை.
கல்லூரியும் முக்கியம் துறையும் முக்கியம்.
நல்ல கல்லூரி என்பதற்காக வாய்ப்புகள் குறைவான ஒரு துறையைப் படிப்பது சரியாக இருக்காது.
நமக்குப் பிடித்த துறை என்பதால் தேடிப் போய் ஒரு சுமார் கல்லூரியில் படிப்பதும் சரியாக இருக்காது.
ஏற்கனவே சென்ற பகுதியில், தவிர்க்க வேண்டிய படிப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
நல்ல கல்லூரி என்றாலும் அத்தகைய துறைகளைத் தவிர்த்து விட்டு,
அதற்கு அடுத்த நிலைக் கல்லூரியில் நல்ல அடிப்படையான துறையைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.
எடுத்துக்காட்டுக்கு,
Number 1 கல்லூரியில் leather, textile, rubber, plastic என்று கேள்விப்படாத துறையைப் படிப்பதைக் காட்டிலும்
Number 2 கல்லூரியில் Computer science, IT, ECE, EEE போன்ற படிப்புகளைப் படிப்பது நல்லது.
எனவே, படித்தால் computer science மட்டும் தான் படிப்பேன் என்று,
100 தெரிவுகளையும் வெறும் computer sciene மட்டுமே தந்து மொக்கையான கல்லூரிகள் வரை பட்டியல் இடாதீர்கள்.
அதே போல், படித்தால் Anna University campus தான் என்று அங்கு உள்ள அத்தனைப் படிப்புகளையும் வரிசையாகத் தராதீ்ர்கள்.
Computer science படிப்பது தான் விருப்பம் என்றால்,
என்று தந்து விட்டு அதற்கடுத்த வரிசையில்
என்று தந்து விட்டு அதற்கடுத்த வரிசையில்
என்று தாருங்கள்.
இப்படித் தருவதன் மூலம் முதல் மூன்று தரமான கல்லூரிகளில் ஏதேனும் ஒரு நல்ல படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அதை விட்டு விட்டு, Rank 1 முதல் 100 வரை கல்லூரிகளில் படித்தால் Computer science மட்டுமே படிப்பேன் என்று நிரப்பினால்,
நூறாவது rank கல்லூரியில் கூட இடம் கிடைக்கும் நிலை உண்டு. ஆனால், உங்கள் மதிப்பெண்ணுக்கு அதை விட நல்ல கல்லூரியில் வேறு ஒரு நல்ல துறையில் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
எனவே, எப்போதுமே கல்லூரி, துறை இரண்டையுமே balance செய்வது போல் தெரிவுகளைத் தாருங்கள்.
அருகருகே தர நிலை உள்ள கல்லூரிகளுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்காது. எனவே, பொதுவாக வேலைவாய்ப்பு தரக்கூடிய எந்தத் துறையானாலும் சரி என்று எண்ணுகிறவர்கள் இந்த அணுமுறையைப் பின்பற்றலாம்.