பகுதி - 10

கேள்வி: உள்ளூர் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் தரலாமா? தொலை தூரக் கல்லூரிகளுக்கு அனுப்பத் தயக்கமாக உள்ளதே! அங்கு போய் என் பிள்ளை "கெட்டுப் போய் விட்டால்" என்ன செய்வது?

பதில்:

ஒரு மாணவர் +2 வரை பெற்றோருடன் ஒரே வீட்டில் வளர வேண்டும். +2வுக்குப் பிறகு அதே வீட்டில் இருக்கக்கூடாது என்பது தான் என் பரிந்துரை.

+2 முடிந்து கல்லூரி செல்லும் வயதில்,

இன்னொரு ஊருக்க்குச் சென்றோ விடுதியில் தங்கியோ படிப்பது தான் அவருடை ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் என்பது என் கருத்து.

முக்கியமாக, திறமையான மாணவர்களின் (குறிப்பாக, மாணவிகள்) பெற்றோர்கள் அவரைப் படித்தால் உள்ளூரில் day scholar ஆகத் தான் படிக்க வைப்போம் என்று எண்ணுவது,

அவருடைய தகுதிக்குக் குறைவான ஏதோ ஒரு சுமார் உள்ளூர் கல்லூரியில் தள்ளி விடக்கூடும்.

எனவே, உள்ளூரோ வெளியூரோ அந்த மாணவரின் திறமைக்கு எது சரியான கல்லூரியாக இருக்கும் என்று மட்டும் பாருங்கள்.

வறிய குடும்பம், உள்ளூரில் அரசு பேருந்து, சொந்த வண்டியில் போய் வந்தால் செலவு மிச்சம், hostel fees கட்டுவது சிரமம் என்று நினைப்பவர்கள் இந்த ஆலோசனையைப் புறந்தள்ளலாம்.

அப்படியே வறிய நிலை இருந்தாலும் கூட, வறிய நிலை உள்ள மாணவர்களுக்கு முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் முதல் அரசுப் பள்ளி மாணவர் 7.5% இட ஒதுக்கீடு முற்றிலும் இலவசக் கல்வி முதல் பல்வேறு உதவித் திட்டங்கள் உள்ளன.

எனவே, செலவு மிச்சம் என்ற ஒரே காரணத்துக்காக உள்ளூர் கல்லூரியைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.

அதே போல், வெளியூருக்குப் போய் விடுதியில் இருந்தால்,

பையன் குடி, சிகரெட் பிடித்து கெட்டுப் போய் விடுவான்,

பிள்ளைகள் வேறு சாதி, மத ஆட்களுடன் காதலில் விழுந்து படிப்பில் கவனம் சிதறி உங்கள் விருப்பதுக்கு மாறாகத் திருமணம் செய்து கொள்வார்கள்,

ஆகவே, வீட்டிலேயே அடைத்து வைத்துப் படிக்க வைப்போம் என்று பத்தாம் பசலித்தனமான எண்ணங்களை விட்டொழியுங்கள்.

கல்லூரியில் படிக்கும் வயதில் அவர்கள் சுதந்திரமாக வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டால் தான்

நாளை வேலை, திருமணம் என்று செல்லும் போது அங்கு நேரும் பிரச்சைனைகளை எதிர்கொள்வதற்கான ஆளுமைத் திறன்களை வளர்த்துக் கொள்வார்கள்.

முக்கியமாக, காலத்துக்கும் நிலைக்கும் நட்புகளைக் கல்லூரி விடுதி வாழ்க்கைத் தரும்.

அந்த இனிய பரிசை உங்கள் பிள்ளைகளுக்குத் தாருங்கள்.

Source article link