பகுதி - 9

கேள்வி: சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தான் அதிகம் exposure கிடைக்கும் என்கிறார்களே? அந்தக் கல்லூரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டுமா?

பதில்:

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் படித்தால் ஓரளவு exposure கிடைக்கும் என்பது ஓரளவு தான் உண்மை.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வாய்ப்புகளைத் தரும் தர வரிசையில் முன்னணியில் உள்ள கல்லூரிகள் உள்ளன. அவற்றையும் ஆராய்ந்து பார்த்து கல்லூரிகளைத் தேர்ந்தெடுங்கள்.

4 வருடக் கல்லூரிப் படிப்பில் கல்லூரி இருக்கும் இடம் என்பது ஒரு தனித்தீவு போன்றது தான். ஓரளவுக்கு மேல் extra curricular, exposure எல்லாம் தாண்டி,

குறிப்பிட்ட கல்லூரியின் புகழ், அங்கு பாடம் நடத்துகிறவர்களின் திறமை, உடன் படிக்கிற மாணவர்களின் தகுதி தான் உங்கள் வாய்ப்புகளை மேம்படுத்தும்.

குறிப்பிட்ட கல்லூரியின் புகழ், அங்கு பாடம் நடத்துகிறவர்களின் திறமை, உடன் படிக்கிற மாணவர்களின் தகுதி தான் உங்கள் வாய்ப்புகளை மேம்படுத்தும்.

அந்த மாவட்டங்களில் பல மொக்கைக் கல்லூரிகளும் உள்ளன. குறிப்பாக, மாவட்டத் தலைநகரை விட்டு வெகு தொலைவில் பக்கத்து மாவட்டத்தின் எல்லையில் இருக்கும். அதையும் சென்னை, கோவை என்று தான் முகவரியில் சொல்வார்கள். முகவரி பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

கல்லூரிகளின் தர வரிசையை வைத்து முடிவெடுங்கள். அது எப்படி தர வரிசை பார்ப்பது என்கிறீர்களா?

அதை அடுத்தடுத்த பாகங்களில் பார்ப்போம்.

Source article link