பகுதி - 5
கல்லூரிகளை நிரப்பும் பக்கத்தில் Lock Choices என்று ஒரு தெரிவு இருக்கும்.
எக்காரணம் கொண்டும் தயவு செய்து அதை மட்டும் முன்கூடியே பூட்டி விடாதீர்கள்.
அதை ஒரு முறை பூட்டினால் மீண்டும் தெரிவுகளை மாற்றவே முடியாது.
உங்கள் தெரிவுகளை நிரப்ப முதல் நாள் காலை தொடங்கி மறுநாள் மாலை 5 மணி வரைக்கும் நேரம் உண்டு. கிட்டத்தட்ட 32 மணி நேரம். இந்த நேரத்திற்குள் நீங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக அந்தத் தெரிவுகளை மாற்ற முனையக்கூடும். கடைசி நேரத்தில் ஒரு பிழை தென்படலாம். எனவே, அதைப் பூட்டாமல் அப்படியே வைத்திருப்பது நல்லது.
மறுநாள் 5 மணிக்கு என்ன வரிசையில் தெரிவுகள் உள்ளனவோ அது தானாகவே auto lock ஆகி விடும். ஆகவே, நீங்கள் உட்கார்ந்து பூட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை.
அதே வேளை, இந்தப் படிவத்தில் login control ஒரே ஒரு நபரிடம் இருப்பது முக்கியம். வீட்டில் உள்ள அண்ணன், மாமா, சித்தப்பா எல்லோரும் ஆலோசனையை வாய் வழியே கூற வேண்டுமே ஒழிய ஆளாளுக்கு login செய்து வரிசையை மாற்றுவது குழப்பத்தில் முடியும்.
சரியாக, 5 மணி முடிவதற்கு சில மணித்துளிகள் முன்பு தெரிவுகளை இறுதியாக ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு lock செய்யுங்கள். அப்படி lock செய்யும் முன் இன்னும் ஓரிருவரிடம் காட்டி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.