பகுதி - 6
கேள்வி: எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது? எந்தப் படிப்பைத் தவிர்க்க வேண்டும்?
பதில்:
பொறியியல் என்பது நூற்றாண்டுகள் பழமையான துறை.
அந்தக் காலத்தின் தொழிற் துறைச் சூழலைக் கருத்தில் கொண்டு,
தொடக்கக் காலதில் Civil, Mechanical, Chemical, Electrical engineering போன்ற துறைகளே இருந்தன.
புகழ் பெற்ற கல்லூரிகளில் இத்துறைகள் இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
தற்போது, உலக மாற்றத்துக்கு ஏற்ப Computer Science, Electronics and Communication போன்ற துறைகளும் அடிப்படையான துறைகளாக மாறி உள்ளன.
நீங்கள் இவ்வாறான அடிப்படையான துறைகளைத் தேர்ந்தெடுப்பதே வேலைவாய்ப்பு, உயர்கல்வி என்று அனைத்து நோக்கிலும் நல்லது.
Textile, leather, rubber, plastic போன்று ஒரு சிறு கல்லூரிகளிலே உள்ள படிப்புகளைத் தவிர்த்து விடவும்.
இல்லை, இது போன்ற துறைகளுக்கு வேலை வாய்ப்பு உண்டு, Mining போன்ற படிப்புகளுக்கு அரசு வேலைவாய்ப்புகள் உண்டு என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், வேலைவாய்ப்புகள் குறைவாகவும் risk அதிமாகவும் இருக்கும்.
எனவே, எந்தக் கல்லூரியில் படித்தாலும்
- Civil Engineering
- Mechanical Engineering
- Chemical Engineering
- Electrical and electronics engineering
- Electronics and Communication Engineering
- Computer Science and Engineering
போன்ற படிப்புகளில் மட்டும் சேரவும். இது உங்கள் வாய்ப்புகளைப் பரவலாகவும் திறந்த முறையிலும் வைத்திருக்கும் (open and broad).
இன்று புதிதாகத் தோன்றும் பல தொழிற் துறைகளின் தேவை கருதியும், கல்லூரிகள் தங்களுக்கு இடையே போட்டி இடும் தேவை கருதியும் புதுப்புது படிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அத்தகைய புதுப் படிப்புகளில் சேராதீர்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு கல்லூரியில் Chemical கிடைக்கவில்லை என்று அதே கல்லூரியில் Petrochemical engineering படிப்பில் சேராதீர்கள். அதே போன்ற இன்னொரு கல்லூரியில் Chemical Engineeringஏ சேருங்கள்.
பெட்ரோலியம் துறையில் வேலை வாய்ப்புகள் உண்டு தான். ஆனால், அதற்கு நீங்கள் Petrochemical engineering படித்தால் தான் வேலை கிடைக்கும் என்றோ, அந்தப் படிப்பைப் படித்தவர்களுக்குத் தான் முன்னுரிமை என்றோ எதுவும் இல்லை. Chemical engineering படித்து விட்டுப் பிறகு பட்ட மேற்படிப்பில் இவ்வாறு நுணுகிய துறை சார்ந்து சிறப்புப் படிப்புகளைப் படித்தால் போதும்.
B.E, B.Tech - அடிப்படையான துறைகள்
M.E, M. Tech - Specialised துறைகள்
என்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
Bio medical enginnering, Biotechnology போன்ற படிப்புகள் fancyஆகத் தோன்றும். ஆனால், B.E./B.Tech முடித்த உடன் வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். PhD வரை நீண்ட காலம் படித்தால் தான் செட்டில் ஆக முடியும் என்ற நிலையும் உண்டு. எனவே, படித்த உடன் வேலை என்ற எதிர்பார்ப்பு உள்ள நடுத்தர, அடித்தட்டு வகுப்பு மாணவர்கள்,
Civil, Mechanical, Chemical, Electronics and Communication, Electrical and Electronics, Computer Science and Engineering
போன்ற அடிப்படையான துறைகளில் மட்டும் சேருங்கள்.