பகுதி - 15
ஐயா சாமி, விடிஞ்சா கவுன்சலிங்.. கவுன்சலிங் போறவங்களுக்கே உளவியல் மருத்துவர் மாதிரி கவுன்சலிங் கொடுத்துக்கிட்டிருந்தா எப்படி? Main matterக்கு வரவும். என் கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எந்த காலேஜ் கிடைக்கும், எதைத் தேர்ந்தெடுக்கணும். அதைச் சொல்லுங்க..
வரேன்.. வரேன்.. எந்தக் கல்லூரிக்கு முன்னுரிமை என்பது மிக எளிமையான சூத்திரம் தான். ஆனால், அந்த வரிசையை நிரப்பும் முன், இதற்கு முன்பு நான் சொன்ன எல்லாவற்றையும் மனதில் இறுத்தித் தெளிவுபடுத்திக் கொண்டால் தான், சொதப்பல் இல்லாமல் சுபமாக முடியும்.
என் உறவினர் மகன் மிக நல்ல மதிப்பெண்களை வைத்திருந்தார். Number 1 கல்லூரி போலவே பெயருடைய ஒரு மொக்கைக் கல்லூரியை முதல் optionஆகப் போட்டுவிட்டு,
அதை யாரிடமும் சொல்லாமல் Lock choices ம் செய்து விட்டார்.
இதனால் அவர் கவுன்சலிங்கை விட்டே வெளியேறி தனியாக ஒரு கல்லூரியில் Management seat எடுக்க வேண்டி வந்தது. அது ஒரு மிக மன உளைச்சலான அனுபவம்.
இது போல் பல மாணவர்களுக்கு உதவியதில் கற்றுக் கொண்டவை, தவிர்க்க வேண்டியவற்றைத் தொகுத்துத் தான் இது வரை உள்ள குறிப்புகளைக் கூறினேன்.
சரி, விடிஞ்சா கலந்தாய்வு என்னும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விசயங்கள்:
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள், அங்குள்ள படிப்புகள், காலி இடங்கள், கட்டண விவரங்கள், இதற்கு முந்தைய சுற்றில் நிரம்பி இடங்கள், அவர்களின் கட் ஆப் மதிப்பெண்கள் முதலானவை!
இந்தத் தகவலை வைத்துத் தான் உங்கள் பிள்ளைக்கு என்ன மதிப்பெண் கிடைக்கும், எந்த வரிசையில் கல்லூரிகளை நிரப்ப முடியும் என்று முடிவெடுக்க முடியும்.
அது தொடர்பான இணைப்புகள்.
TAMIL NADU ENGINEERING ADMISSIONS 2021
2021 இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில் காலியாக உள்ள இடங்கள் பட்டியல்
2021 இரண்டாம் சுற்று கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவர்கள் கட் ஆப் விவரம்